முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 15,000 கனஅடியாக குறைப்பு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

பெங்களூர் : நீர் வரத்து குறைந்ததால் கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

உபரி நீர் திறப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கபினி அணைக்கு வரும் நீர் வரத்து பிற அணைகளை காட்டிலும் மிக அதிகம். எனவே, உபரி நீரை கர்நாடகா கபினியில் இருந்து திறந்து விட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வினாடிக்கு 5000 கன அடி நீரை கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு திறந்து விட்டிருந்தது.

அளவு குறைப்பு

ஆனால், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகப்படியாக வந்தபடி உள்ளதால், நேற்று முன்தினம் வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்றும் தொடர்ந்து  2-வது நாளாக வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டு வந்து சேர்ந்தது. தற்போது கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தற்போது வந்து கொண்டிருக்கும்  காவிரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து