தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      வர்த்தகம்
gold 2017 10 05

சென்னையில் கடந்த 7-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 536 ஆக இருந்தது. விலை ஏற்ற இறக்கத்துடன் வியாழக்கிழமை ரூ.23 ஆயிரத்து 760-க்கு விற்றது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 808 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 குறைந்துள்ளது.

ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 584 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.28 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,948-க்கு விற்பனையானது. பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக தெரிகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.44.30-க்கு விற்பனையானது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து