முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸின் 133வது பிறந்த தினவிழா: தியாகியின் சிலைக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,செல்லூர் கே.ராஜூ,கடம்பூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை:

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற தியாகி விஸ்வநாததாஸின் 132வது பிறந்த தினவிழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,செல்லூர் கே.ராஜூ,கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நினைவு இல்லத்தில் உள்ள தியாகியின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த தியாகி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சிடாமல் தன்னுடைய எழுச்சி மிகுந்த நாடகங்கள் மூலம் மக்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தியதற்காக 29முறை சிறை சென்று அடக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளார்.மேலும் ஆங்கியேர்களை கடுமையாகச் சாடிடும் நாடகங்களை தைரியமுடன் அரங்கேற்றி வந்த அவர் நாடகமேடையிலே நாட்டிற்காக தனது இன்னுயிரை இழந்ததினால் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் என்று மக்களால் இன்றும் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.அவரது தியாகத்தை போற்றுகின்ற வகையில் திருமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீடு தற்போது நினைவில்லமாக மாற்றப்பட்டு மார்பளவு சிலையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.இத்தகைய பெருமைமிகு தியாகி விஸ்வநாததாஸின் 132வது பிறந்ததினவிழா நேற்று திருமங்கலம் நகரில் நேற்று வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நேற்று முன்னதினம் திருமங்கலம் நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தமிழக அரசின் சார்பிலும் மருத்துவர் சமுதாய அமைப்புக்களின் சார்பிலும் மரியாதை செய்திடும் நிகழ்ச்சிகள் நேற்று வெகுசிறப்புடன் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு நினைவில்லத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் தமிழக அரசின் சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்த நினைவு இல்லத்தையும், தியாகியின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்.பின்னர் மருத்துவர் சமுதாய அமைப்புகளின் சார்பாக நினைவில்லத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியாகி விஸ்வநாததாஸின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,செல்லூர் கே.ராஜூ,கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் தியாகியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்ததான முகாமையும்,5ஆயிரம் பேருக்கான மாபெரும் அன்னதான நிகழ்ச்சியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ்,புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன்,பெரியபுள்ளான்(எ)செல்வம், முன்னாள் மாவட்டச் செயலாளர்எம்.ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாநில எம்.ஜி.ஆர் மன்ற எம்.எஸ்.பாண்டியன்.மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, வக்கீல்ரமேஷ்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல் அன்பழகன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச் செயலாளர் நிலையூர் முருகன்,பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம், நகர அவைத் தலைவர் ஜஹாங்கிர்,ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணைச் செயலாளர் சுகுமார்,கட்சி நிர்வாகிகள் மாணிக்கம்,வக்கீல்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன், பாஸ்கரன் மற்றும் திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து