முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயினுக்கு எதிரான போட்டி: 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

சோச்சி : நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார்.

உலக கோப்பை கால் பந்து போட்டியில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-போர்ச்சுக்கல் அணிகள் மோதின. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதாலும், போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததாலும் போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற் போலவே ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக இருந்தது.

6-வது முறை...

இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார். மேலும் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். பீலே (பிரேசில்), சீலர், குளோஸ் (ஜெர்மனி) ஆகியோர் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து