முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

கேண்டர்பரி : தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-வது போட்டி

இங்கிலாந்து சென்றுள்ள தென்னாப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 9-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியும், 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேண்டர்பரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

பேட்டிங் தேர்வு

இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிசெலி லீ, லாரா வோல்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லிசெலி லீ 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அண்ட்ரி ஸ்டெயின் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

லாரா அரைசதம்

அதைத்தொடர்ந்து லாரா உடன், டேன் வேன் நெய்கெர்க் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். லாரா 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். டேன் வேன் நெய்கெர்க் 106 பந்தில் 95 ரன்கள் எடுத்து ஸ்டிம்பிங் முறையில் வெளியேறினார். இதுதவிர சோலே ட்ரையான் 19 ரன்களும், மிக்னொன் டு பிரீஸ் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்ரிக்கா அணி 49.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் கேத்ரின் பர்ண்ட் 3 விக்கெட்களும், லாரா மார்ஷ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

ஹீதர் நைட் அபாரம்

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எமி எல்லென் ஜோன்ஸ், டேமி பியூமோண்ட் ஆகியோர் களமிறங்கினர். ஜோன்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சாரா டெய்லர் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டேமி பியூமோண்ட் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன் குவித்தார். இருவரும் அரைசதம் அடித்தனர்.

இங்கி. வெற்றி...

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேமி பியூமோண்ட் சதம் அடித்தார். அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹீதர் நைட் 83 பந்துகளில் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் அயபோங்கா காகா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து