முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுமை காரணமாக நாராயண மூர்த்திக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை: கர்நாடக முதல்வர் குமாரசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கர்நாடகா: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திக்கு 71 வயது ஆகிவிட்டதால், அவருக்கு அரசு பதவி வழங்க முடியவில்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக திட்டக் குழுவின் தலைவராக இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியை நியமிப்பது குறித்து, சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை வழங்கினர். இதனால் கடந்த 6-ம் தேதி அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். கர்நாடக மாநிலத்தில் நிதி ஆதாரத்தை முறையாக பயன்படுத்துவது, பெங்களூரு மாநகரை சிறந்த முறையில் வடிவமைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினோம். அப்போது எனது தலைமையிலான கூட்டணி அரசுக்கு உதவுவதற்கு தயார் என்று அவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எனினும் கர்நாடக திட்டக் குழுவின் தலைவராக நாராயண மூர்த்தியை நியமிப்பதற்கு அவரது முதுமை ஒரு பெரும் தடையாக இருக்கிறது. அவருக்கு 71 வயதாகிவிட்டதால் அரசு பதவி வழங்க முடியவில்லை. இருப்பினும் வெளியே இருந்து அரசுக்கு உதவ நாராயண மூர்த்தி தயாராக இருக்கிறார். அவரது ஆலோசனையை பரிசீலிக்க முடிவெடுத்திருக்கிறோம். இந்நிலையில், கர்நாடக திட்டக் குழு தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து