முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்: சமூக வலைதள பிரசாரத்திற்கு 65,000 பேரை களமிறக்கிய பாஜக

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

போபால்:  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டப் பேரவை தோ்தலுக்காக சமூக வலைதளங்கள் மூலம் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக 65,000 பேரை பா.ஜ.க களமிறக்கியுள்ளது.

1998-ஆம் ஆண்டு முதல் அங்கு பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. இந்த முறையும் எப்படியும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரசும், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஏற்கனவே அங்கு தோ்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டாா்.
சமீபகாலமாக நேரடி பிரசாரத்துக்கு இணையாக பேஸ்புக், டுவிட்டா், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரமும் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக இளம் வாக்காளா்களை எளிதில் சென்றடைய இந்த உத்தி உதவுகிறது.

எனவே, மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், காங்கிரசும் சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்வதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவின் சேனை என்ற பெயரில் 4,000 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சமூகவலைதளங்களில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனா். இது தவிர மேலும் 5,000 பேரைத் தோ்வு செய்து களமிறக்க இருப்பதாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் தா்மேந்திர பாஜ்பாய் கூறியுள்ளாா்.

காங்கிரஸின் இந்த உத்தியை வெல்லும நோக்கில் பாஜக சுமாா் 65,000 பேரை சமூக வலைதள பிரசாரத்துக்காக களம் இறக்கியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் சிவராஜ் சிங் தாபி கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களில் 65,000 பேரை இணையதள பிரசாரத்துக்காக நியமித்துள்ளோம். அவா்களுக்கு ‘சைபா் வாரியா்ஸ்’ என்று பெயா் சூட்டியுள்ளோம். தோ்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் 5,000 போ் கூடுதலாக சமூக வலைதள பிரசாரத்தில் ஈடுபடுவாா்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து