முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: கோதாவரி, காவிரி, வைகை உள்ளிட்ட நதிகளை இணைக்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் டெல்லியில் நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாக குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், யூனியன் பிரதேச கவர்னர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு 2023...
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி பேசியதாவது:-

மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா 24.3.2012 அன்று வி‌ஷன் தமிழ்நாடு 2023 என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதில் அவர் வெளியிட்ட திட்டங்கள், நல்லாட்சி மற்றும் வளர்ச்சி மேம்பாடுகளை கொண்டது. இந்தியாவில் மாநிலங்கள் கலாச்சாரம், பண்பாடு ரீதியாக மாறுபட்டு உள்ளது. எனவே அதற்கேற்ப மாநில அரசுகள் திட்டமிடவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கேற்ப மத்திய அரசு உதவிகள் செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும். தமிழ்நாட்டில் நீர்பாசன திட்டங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.

2016-17-ம் ஆண்டு ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாருவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 30 மாவட்டங்களில் 1500 பணிகள் செய்யப்பட்டன.

நதிகள் இணைப்பு...
தமிழகம் நீர்தேவைக்கு காவிரியை சார்ந்துள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும். காவிரி தண்ணீரை நம்பியே தமிழகத்தில் பல மாவட்டங்கள் உள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்ற பட வேண்டும். மகாநதி, கோதாவரி, காவிரி, வைகை நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். 15-வது நிதிக்குழுவில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை நிறுவ மத்திய அரசு முன்வர வேண்டும்.

பசுமை பூமி விருது
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகளுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமயத்தில் சில பரிந்துரைகளை தெரிவிக்க விரும்புகிறேன். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உலகளாவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தி, பசுமையை பாதுகாக்கும் சேவையில் ஈடுபடும் சிறந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மத்திய அரசின் சார்பில் நோபல் பரிசுக்கு இணையாக ஆண்டுதோறும் பசுமை பூமி விருது அளிக்கப்பட வேண்டும். மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியத்துக்கு கூடுதல் தொகுப்பு நிதியாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும்.

தரம் உயர்த்த வேண்டும்
தமிழ்நாட்டில் இயங்கிவரும் காந்திகிராம் கிராமப்புற பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். 500 கோடி ரூபாய் செலவில் காந்திய கொள்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கான ஆராய்ச்சி மையம் அங்கு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. காரணமாக ரூ.6ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1804 கோடி தர வேண்டி உள்ளது. பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இந்த நிலுவைத்தொகையை அனுமதிக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து