முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் அமைக்க பூமி பூஜை.

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-  பாம்பன் கடலோரப்பகுதியில் மீனவர்கள் ஆழ் கடல் மீன்பிடிப்பு முறைக்கு பயன் பெறும் வகையில் குந்துகால் கடலோரப்பகுதியில் மீன்கள் இறங்கு தளம் அமைப்பதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
 இராமநாதபுரம் மாவட்டம் பாம்பான்,ராமேசுவரம் மீனவர்கள் பயன்பெறும் வகையில்  மீன்கள் இறங்குதளத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தும் நெருக்கடியை குறைக்கும் வகையில் பாம்பன் ஊராட்சி, குந்துகால் மீனவ கிராமத்தில்  புதியதாக ரூ.70 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.  அப்பகுதியில் நடைபெற்ற இந்த  நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன்  தலைமை வகித்தார். தமிழக  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மணிகண்டன் பூமிபூஜை செய்து பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல்லை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநா மணிகண்டன்,   செயற்பொறியாளர் முத்துகுமார், உதவி செயற்பொறியாளா்கள் நாகரத்தினம், சிவக்குமார் மீனவ சங் தலைவர்கள் போஸ்.தேவதாஸ்,எமரிட்,சகாயம்,எஸ்,பி,ராயப்பன்,சேசுராஜா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தது.
  இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் சுமார் 16,500  மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்,இதில் பெரும்பாலான மீனவ படகுகள் இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு வருவதால் மீனவர்கள் போதுமான வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் நெருக்கடியினை குறைத்திடும் விதமாக இன்றைய தினம் பாம்பன் ஊராட்சியில் உள்ள குந்துகால் கடலோரப் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதியதாக மீன்கள் இறங்குதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதன்மூலம் மீனவ மக்கள் சுமார் 450 மீன்பிடி படகுகளை இங்கு நிறுத்தும் வகையில் வசதிகள் செய்யப்படும். சில வாரங்களுக்கு முன்னாள் குந்துகாலில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ரூ.200 கோடி மதிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியோடு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனால் மீனவர்கள் எல்லை தாண்டி கச்சத்தீவு வரை சென்று மீன்பிடிக்கும் சிரமங்களும் மற்றும் மீனவா்களுக்கு ஏற்படும் இன்னல்களும் வெகுவாக குறைந்து, மீன்பிடி தொழிலினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு வழி வகுக்கும் வகையில்  இப்பகுதியினை சுற்றுலா தளமாக மாற்றிட சுற்றுலா துறையின் சார்பில் மத்திய அரசின சுதேஷி தா்ஷன் என்ற திட்டத்தின் கீழ் ரூ.4.5 கோடி மதிப்பில் ஒளி-ஒலி காட்சி அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளன. இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நலனுக்காக, ரூ.113.90 கோடி மதிப்பில் மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எனவே இனிவரும் காலங்களில் மீனவா்களின் உயிர்க்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்புடன் அவா்களின் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம் என  அமைச்சா் மணிகண்டன் தெரிவித்தார்
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து