முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் 3 நாளாக அமலில் இருந்த சண்டை நிறுத்ததை மேலும் நீட்டிக்க, தலிபான் பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். மேலும், அரசுப் படைகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஆப்கன் அரசு அறிவித்திருந்த சண்டை நிறுத்தத்தை ஏற்று, அரசுப் படைகள் மீதான தாக்குதலை 3 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இணக்க சூழல் தொடரும் எனவும், இரு தரப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நாட்டில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தலிபான்களுடனான சண்டை நிறுத்தத்தை மேலும் 9 நாள்களுக்கு நீட்டிக்கப் போவதாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்தார். எனினும், அதனை ஏற்க தலிபான் பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் தெரிவித்ததாவது:

ரமலானையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார் அவர்.

மேலும், பாதுகாப்புப் படையினருடன் ஈத்-அல்-பிதர் பண்டிகையைக் கொண்டாட தலிபான் உறுப்பினர்களை தாங்கள்தான் அனுப்பி வைத்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.

ஆப்கன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை குறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினாலும், ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆப்கன் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து