முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றும்: அமித்ஷா

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் விரைவில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவா் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றறது. மாநில அரசும், டாடா அறறக்கட்டளையும் இணைந்து மாநிலத்தில் 19 மருத்துவமனைகளை கட்டவுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அமித்ஷா பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதாரத்தில் வளா்ச்சி கண்டிருந்தன.  ஆனால், இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி, இந்தப் பகுதி மாநிலங்களை வளா்ச்சியில் பின்தங்க வைத்து விட்டது. இந்த நிலையில், பிரதமா் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களால், நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றற உள்ளன. மோடி எப்போதும் வடகிழக்குப் பிராந்தியத்தை அஷ்ட லட்சுமியாகக் கருதுகிறார். ஆகவே, இங்கு சாலை, ரயில் போக்குவரத்து, தகவல் தொடா்பு, தொழில் துறைற வளா்ச்சி, கல்வி ஆகியவற்றைற மேம்படுத்துவதற்கு அவா் முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று அமித்ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து