முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் இருக்கிறாரா? நிர்மலா சீதாராமனை விளாசிய சிவசேனா

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைகள், தீவிரவாதிகளால் சுடப்பட்டு வரும் நமது படை வீரர்கள் போன்ற சம்பவங்களை பார்க்கும் போது உண்மையில் நமது நாட்டுக்குப் பாதுகாப்பு அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது என சிவசேனா கட்சி கூறியுள்ளது.

இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

நம்முடைய நாட்டின் முப்படைகளின் தலைவர்களும் எந்தவிதமான சூழலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். அதற்கான வலிமை நம்மிடம் இருக்கிறது என்று ஏற்கனவே கூறி இருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பவர் திறமையற்றவராக இருக்கிறார். சோபியான் பகுதியில் பாதுகாப்பில் இருந்த நம்முடைய படைவீரர் அவுரங்கசீப் முகம்மது ஹனீப் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு புனித ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

நாங்கள் எப்போதும் முகாலய மன்னர் அவுரங்கசீப்பை விமர்சனம் செய்வோம். ஆனால், நம்முடைய படைவீரர் அவுரங்கசீப் வீரமரணம் அடைந்திருக்கிறார். அவரது வீரம், தியாகம் நாட்டுக்கே ஒரு உத்வேகத்தை நீண்டகாலத்துக்கு அளிக்கும். இந்த வீரனை மத்திய அரசு கண்டிப்பாக கவுரப்படுத்த வேண்டும். அவுரங்கசீப்பின் பெயரைக் கூறி ஜம்மு காஷ்மீரிலும், மகராஷ்டிராவிலும் மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர் இப்போது, நமது படைவீரர், அவுரங்கசீப்பின் வீரமரணத்தைக் கண்டு, தலைகுனிந்து நிற்கிறார்கள். இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து