முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் - முட்டுக்கட்டை போடும் குமாரசாமி

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கர்நாடகா : காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து ஆணையத்தை செயல்படுத்திட வலியுறுத்தி தமிழகம், புதுவையில் நடந்த பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. புதுச்சேரி மற்றும் தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டன. இதையடுத்து மத்திய அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைவது தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், கர்நாடகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கும் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகம் அதன் உறுப்பினர்களின் பெயர்களை ஜூன் 12-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்த நிலையில், அதை கர்நாடகம் மதிக்கவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமலேயே காவிரி ஆணைய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சட்டம் 1956-ன் படி பாராளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவித்தார். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இந்த பேச்சு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து