முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

சுவிஸ் : சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணி போராடி டிரா செய்தது.

உலகக் கோப்பை கால்பந்து 2018 பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில், தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்திடம் போராடி டிரா செய்தது.

போட்டியின் முதல் பாதியில் பிரேசிலின் பிலிப் கௌடினோ அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இருப்பினும் சிறிது நேரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீவன் சுபேர், அற்புதமாக தலையால் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இருப்பினும் சுவிட்சர்லாந்து வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும், அந்த அணியின் கோல் கீப்பர் யான் சோம்மரின் அற்புதமான செயல்பாட்டாலும் பிரேசில் அணி திணறியது. எனவே மேற்கொண்டு இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத காரணத்தால் போட்டி டிராவில் முடிந்தது. இதன்மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ந்து 9 துவக்க ஆட்டங்களில் வெற்றிபெற்று வந்த பிரேசில் அணிக்கு இதில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து