முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வட கொரிய அதிபர் கிம் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில் வடகொரியாவில் அணு ஆயுதங்களை முற்றிலும் அழிப்பதாக கிம் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், கிம் தற்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார். 

கிம் ஏற்கனவே, சீன அதிபரை மார்ச் மற்றும் மே மாதங்களில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து தற்போது 3-வது முறையாக சந்திக்கிறார். சீனா தான் வடகொரியாவின் ஒரே நட்பு நாடு. அதனால், அமெரிக்க அதிபருடனான சந்திப்பு குறித்து இந்த சந்திப்பின் போது ஜின்பிங்கிடம் கிம் ஜாங் நிச்சயம் விவரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அதிபருடனான சந்திப்பு குறித்து இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், கிம், சீனா செல்வது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. அமெரிக்கா - வடகொரியா அதிபர்களின் சந்திப்புக்கு சீனா நேரடி காரணமாக இல்லையென்றாலும், இருநாட்டு சந்திப்பில் சீனா முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து