முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்பு டிரம்ப்பின் மனைவி எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து சிறுவர்கள் தனியாக பிரிக்கப்படுவதற்கு அந்த நாட்டு அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான டிரம்ப்பின் அதிதீவிர கொள்கைப்படி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, இரக்கம் அற்ற, அநீதியான செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து மெலானியா டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபானி கிரிஷம் தெரிவித்துள்ளதாவது,
அகதிகளாக வரும் குடும்பங்களில் இருந்து குழந்தைகள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்படுவதை பார்க்கவே சகிக்கவில்லை என்றும்,  நாடு என்பது சட்ட திட்டங்களை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினாலும், அந்த நாட்டின் அரசு இதயமே இல்லாமல் செயல்படக் கூடாது என்றும் மெலானியா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அகதிகளுக்கும், அரசுக்கும் நல்லிணக்கம் ஏற்பட்டு, குடியேற்றக் கொள்கையில் மிகச் சிறந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மெலானியா நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்-சின் மனைவி லாராவும் அகதிகள் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல், மே மாதம் 31-ம் தேதி வரை மட்டும் அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து 1,995 சிறுவர்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவிலும், மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து