முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுள் மேப் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதி ரத்து

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

செயலி சார்ந்து வாடகை வாகனங்களை புக் செய்யும் சேவையில் உலகின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று உபேர். ஆனால் கூகுளின் மேப் சேவையை பயன்படுத்துபவர்கள் உபேர் நிறுவன அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்தாமல், கூகுளின் மேப் வழியாகவே வாகனங்களை புக்செய்யும் வசதியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறையில் உள்ளது.

அதன்படி கூகுளின் மேப் வழியாக நீங்களே நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் வழி ஆகியவற்றை முடிவு செய்த பின்னர், உபேர் நிறுவன கட்டண விபரங்களை மேப் செயலியில் இருந்த படியே தெரிந்து கொண்டு வாகனத்தினை புக் செய்து கொள்ளலாம். ஆனால் கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக புக் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தற்பொழுது ரத்து செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து