முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்வு எழுத தாலியை கழட்டுங்கள்! பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள் என்று பெண் தேர்வாளர்களை உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரிகள் வற்புறுத்திய நிகழ்வு நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநில காவல்துறைக்கு கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் பதிவு செய்திருந்தனர். தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

குறிப்பாக பிரிசாபாத்தில் உள்ள ஜி.ஜி. பெண்கள் கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பொதுவாகவே தேர்வாளர்கள் செருப்பு, ஷீ, பெல்ட் போன்ற பொருட்களை அணியக் கூடாது. பாதுகாப்பு சோதனையின் போது அவற்றை தேர்வறைக்கு வெளியே விட்டு செல்ல வேண்டும் என வலியுறுத்துவர். ஆனால் இந்த தேர்வின் போது மாணவிகள் தங்கள் அணிந்திருந்த தாலி மற்றும் காதணிகளை கழட்டி வைக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இது அங்கு திரண்டிருந்த பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயினும் கண்டிப்பாக கழட்டினால்தான் தேர்வு எழுத முடியும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியதால் திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை கழட்டி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து