தோட்டக்கலைத்துறையின் மூலம் திராட்சை பயிரிட பந்தல் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் சிவகங்கை கலெக்டர் லதா தகவல்

sivagangai news19 6 18

சிவகங்கை, ஜூன் -   சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பேயன்பட்டி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் திராட்சை பயிரிட்டுள்ள விளைநிலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர்   திராட்சை பயிரிட்டுள்ள விளைநிலங்களை பார்வையிட்டு செய்தியாளர்களுடன் தெரிவிக்கையில்,
            தமிழக அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பகுதியின் மண்வளத்திற்கேற்ப மலைப்பயிர் பயிரிட்டு அதிகளவு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் தோட்டக்கலைத்துறையின் மூலம் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மானியத் திட்டத்தில் உபகரணங்கள், விதைகள், கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்று பயன்பெற்றிடும் வகையில் திராட்சை பயிரிட்டு விவசாயிகள் பயன்பெற அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 1 ஏக்கர் பயிரிடுட்டு பராமரிக்கும் பொழுது அதில் மூன்று முறை மகசூல் பெறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரூ.2,00,000 -த்திற்கு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் மூலம் ஆண்டிற்கு சராசரியாக 40 சதவீதம் வரை இலாபம் கிடைக்கும் வகையில் இத்திட்டம் உள்ளது. தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 10 ஹெக்டேருக்கு மேல் பயிரிட்டு பராமரித்து வருகிறார்கள். இத்திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் தோட்டக்கலைத்துறையின் மூலம் பந்தல் அமைத்தல், சொட்டு நீர் உபகரணம் அமைத்து கொடுத்தல், விளைநிலத்தில் தன்மைக்கேற்ப மண்ணை மாற்றியமைத்து கொடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வதுடன் உதவி அலுவலர்கள் மூலம் தகுந்த வழிகாட்டுதலையும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிர் செய்வதற்கு குறைந்த அளவு தண்ணீர்; இருந்தால் போதுமானதாகும். எனவே மாவட்டத்தில் மற்ற பகுதிகளிலும் விவசாயிகள் தங்களது மண்வளத்திற்கு ஏற்றாற் போல் தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்படும் திராட்சை பயிரிடும் திட்டத்தை பயிரிட்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்ததுடன்,
         மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரியக்குடி, நேமத்தான்பட்டி ஆகியப் பகுதிகளில் திராட்சை பயிரிட்டுள்ள இடங்களை பார்வையிட்டு தோட்டக்கலைத்துறையின் மூலம் மானியத் திட்டத்தில் திராட்சை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதையும், எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதையும், பந்தல் சாகுபடியில் முன்னோடி விவசாயி திரு.விடுதலை அரசு   பந்தல் சாகுபடி முறையில் திராட்சை நடவு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர்  பார்வையிட்டதுடன் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார். 
                  இந்த பயணத்தின் போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்இராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அழகுமலை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து