முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீச்சு

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதன் மூலம் காஸா பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காஸா பகுதியில் இருந்து 45 ராக்கெட் மற்றும் மோட்டார் குண்டுகள் இஸ்ரேல் பகுதியை நோக்கி வீசப்பட்டன. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகள் பாதி வழியிலேயே தடுத்து அழிக்கப்பட்டன. மூன்று ராக்கெட் குண்டுகள் பாதி வழியிலேயே செயல் இழந்து விழுந்து விட்டன. இத்தாக்குதலுக்கு பதிலடியாக காஸா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகளின் 25 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டன. ஹமாஸ் இயக்கத்தினரின் அத்துமீறல்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும். இது தொடர்பாக சேனல் 10 டி.வி.யில் ஒளிபரப்பான செய்தியில், இஸ்ரேல் பகுதியில் உள்ள வீடுகள், கார்கள் போன்றவை குண்டு வீச்சால் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் எந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து