அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
.jpg?itok=2mwhDm7L)
அமெரிக்க - சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளின் வர்த்தக மோதல் காரணமாக இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. அண்மையில் இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை 241 மில்லியன் டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.1,600 கோடி) அமெரிக்கா திடீரென அதிகரித்தது. இதனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் குறையும் நிலை ஏற்பட்டது.
இதை ஈடுகட்டும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 விதமான பொருட்களுக்கு இந்தியா கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிக்க பரிந்துரை செய்து இருந்தது. இதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கொண்டைக் கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட வரி 30 சதவீதமாக இருந்த இருந்தநிலையில், 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு, வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments