முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தினம்கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச யோகாதினத்தையொட்டி கலெக்டர் முனைவர் நடராஜன் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, தரணி இயற்கை வேளாண்மை கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பாக யோகா பயிற்சி நிகழ்;ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் துவக்கி வைத்து பங்கேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியானது மனிதனின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சமநிலைப்படுத்திட உறுதுணை புரிகிறது. இத்தகைய சமநிலையின் மூலம் மனிதனுக்கு உண்டாகும் நோய்களை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடலிற்கு புத்துணர்வும் ஏற்படுகின்றது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பணிச்சுமை போன்ற சூழலில் யோகா என்பது அனைவருக்கும் முக்கிய தேவையாக கருதப்படுகிறது. அதேபோல குடும்பத்தில் உள்ளவர்கள், பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்களின் உடல்நிலைக்கேற்ப தினமும் யோகா எடுத்துக் கொள்வது அவசியமாகும். அயல்நாட்டினர் பலர் யோகா பயிற்சியின் சிறப்புகளை உணர்ந்து நமது இந்திய தேசத்திற்கு வருகை தந்து யோகா பயிற்சியினை கற்று வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் நாள் சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து பங்கேற்றார். மனவளக் கலைமன்ற யோகா வல்லுநர் பேராசிரியர்.ஆர்.முருகேசன் யோகா பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்பால் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், இந்திய கப்பற்படை மற்றும் காவல்துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து