முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழமைக்கு மட்டுமின்றி நவீன காலத்திற்கும் ஏற்றது யோகா - பிரதமர் மோடி பெருமிதம்

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

டேராடூன் : சர்வதேச யோகா தினத்தையொட்டி டேராடூனில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பழமைக்கும் மட்டுமின்றி நவீனத்திற்கும் ஏற்றதாக யோகா இருப்பதாக கூறினார். ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவிப்பின்படி கொண்டாடப்படுகிறது. 2015-ம் ஆண்டு டெல்லி ராஜபாதையில் சர்வதேச யோகா தினத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 35,985 பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று காலை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதற்காக சுமார் 1250 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் இடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. யோகாசன நிகழ்ச்சியில் பல்வேறு விதமான ஆசனங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின. முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். யோகா மூலம் புதிய அனுபவம் கிடைக்கிறது. யோகா செய்வதால் உடல், மனம், ஆன்மாவை அமைதிப்படுத்தலாம். யோகாவால் மன அமைதி கிடைக்கும்; எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா. கங்கை நதி பாயும் இடத்தில் யோகா செய்வது பெரும் பாக்கியம். இதற்காக இந்தியா பெருமை கொள்கிறது. பழங்காலத்தில் மட்டுமின்றி நவீன காலத்திலும் யோகா அழகானதாக இருக்கிறது எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து