முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: நாக் - அவுட் சுற்றுக்கு ரஷ்யா, உருகுவே தகுதி

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் - அவுட் சுற்றுக்கு ரஷ்யா, உருகுவே அணிகள் தகுதி பெற்றுள்ளன. 32 அணிகள்... 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷ்யாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தமுள்ள 8 பிரிவுகளில் இருந்து தலா இரு அணிகள் தேர்வாகி மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் போட்டியிடும். குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் மட்டும் அனைத்து அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. குரூப் சி, டி, இ, எஃப், ஜி, ஹெச் ஆகிய பிரிவுகளில் உள்ள அணிகள் தலா ஓர் ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளன. ரஷ்யா - உருகுவே... இந்நிலையில் நேற்று வரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் இரு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் மூலம் 14 அணிகள் தேர்வாகவுள்ளன. குரூப் ஏ பிரிவில் உள்ளூர் அணியான ரஷ்யாவும் உருகுவேவும் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும். இரு அணிகளில்... குரூப் பிரிவில் இதுபோல தெளிவான நிலை இல்லை. ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் 4 புள்ளிகளும் ஈரான் அணி 3 புள்ளிகளும் பெற்றுள்ளன. இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள மொராக்கோ போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. அடுத்ததாக திங்கள் அன்று, ஸ்பெயின் - மொராக்கோ, ஈரான் -போர்ச்சுகல் ஆகிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் தோற்றாலும், ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றால், போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறும். ஆனால் ஸ்பெயின் தோற்று, ஈரான் வெற்றி பெற்றுவிட்டால், அந்த அணி நாக் அவுட் சுற்றுக்குச் சென்றுவிடும். கோல்களின் அடிப்படையில் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய இரு அணிகளில் ஓர் அணி தகுதி பெறும். ஜூன் 28-ல் முடிகின்றன... லீக் ஆட்டங்கள் ஜூன் 28 அன்று முடிவடைகின்றன. காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் ஜூன் 30 முதல் தொடங்கவுள்ளன. ஜூலை 6 முதல் காலிறுதிச் சுற்றுகளும் ஜூலை 10 முதல் அரையிறுதிச் சுற்றுகளும் தொடங்கவுள்ளன. இறுதிச்சுற்று ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து