முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தை வீழ்த்தி ரஷ்யா அபார வெற்றி

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ரஷ்யா - எகிப்து அணிகள் மோதின. தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள ரஷ்யாவும், 45-வது இடத்தில் உள்ள எகிப்து அணியும் களமிறங்கின. ரஷ்யா அணி தனது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வீழ்த்தியிருந்து. இரு ஆட்டங்களையும் சேர்த்து 8 கோல்கள் அடித்துள்ள ரஷ்ய அணி 6 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. ரஷ்ய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 25-ம் தேதி உருகுவே அணியை சந்திக்கிறது. அதேநாளில் எகிப்து, சவுதி அரேபியாவுடன் மோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து