முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பத்திரிகையாளர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகள் விடுத்த ஒரு நாள் முழு அடைப்பினால் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஷ்மீரில் 3 சிறுவர்களின் கொடூர கொலை மற்றும் பத்திரிகையாளரின் மர்ம மரணம் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத குழுக்கள் நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. காஷ்மீரில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொல்லப்படுவதனை கண்டிக்கும் வகையில் நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அந்த அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தது. இதனை தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள பெருமளவிலான கடைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. நகரில் பேருந்து போக்குவரத்து குறைவாக இருந்தன. ஆனால் தனியார் கார்கள், வேன்கள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்கள் ஆகியவை ஓடின. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற நிலையே இருந்தது. காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து