முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரினாம் வளர்ச்சிக்கு இந்தியா ரூ. 347 கோடி வழங்கும்: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

லத்தீன்: லத்தீன் அமெரிக்க நாடான சூரினாமுக்கு இந்தியா ரூ.347 கோடி நிதியுதவி வழங்கும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதில் குறைந்த வட்டியிலான கடன் தொகையாக ரூ.211 கோடியும், சலுகை அடிப்படையிலான நிதியாக ரூ.136 கோடியும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் சுற்றுப் பயணமாக சூரினாமுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபர் டிசயர் டெலானோ பெளடர்சுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த சந்திப்பின்போது இந்தியா - சூரினாம் இடையே பொருளாதார மற்றும் வளர்ச்சி ரீதியிலான உறவை வலுப்படுத்த இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா வழங்கும் சலுகை அடிப்படையிலான நிதி ரூ.136 கோடியின் மூலமாக, சூரினாமில் உள்ள 49 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கும் வகையில் சூரிய மின்சக்தித் திட்டம் அமைக்கப்படவுள்ளது. மேலும், குறைந்த வட்டியில் வழங்கப்படும் தொகையில் ரூ.187 கோடியானது, பிகின் சரோன் பகுதியில் அமைக்கப்படும் மின் பரிமாற்றத் திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளது. எஞ்சிய ரூ.23 கோடி அங்குள்ள சேடக் ஹெலிகாப்டர்கள் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளது. வேளாண்மை, சுரங்கம், ஆற்றல், மர வேலைப்பாடுகள் துறை ஆகியவற்றில் முதலீடு செய்யுமாறு இந்தியாவுக்கு சூரினாம் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, சூரினாம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதி அந்தஸ்தில் இருக்கும் ஒரு வெளிநாட்டுத் தலைவர் அங்கு உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து