முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் ராம்கோ குழுமத்தின் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா படத்திறப்பு விழா

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் -- மொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதிற்கொண்டு ராஜபாளையத்தில் தொழிற்துறையில் சாதனை படைத்;தவர் மறைந்த ராம்கோ குழுமத்தின் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா,ஐ.என்.டி.யூ.சி சார்பில் தொழிற்சங்கம் சர்hபில் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா படத்திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு.
ராஜபாளையம் தென்காசி சாலை ஆனந்தா திருமண மண்டபத்தில் ஐ.என்.டி.யூ.சி. தேசிய தொழிற் சங்கம் சார்பில் மறைந்த ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா உருவப்படத்திறப்பு விழா அருப்புகோட்டை ஸ்ரீராமலிங்க மில்ஸ் சேர்மன் தினகரன் தலைமையில் நடைபெற்றது.ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா முன்னிலை வகித்தார்.முன்னதாக ஐ.என்.டி.யூ.சி.தலைவர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது:
ராஜபாளையத்திற்கு பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜாவின் அழைப்பை ஏற்று தவறாது பல ஆண்டுகள் இங்கு வந்து விடுமுறையை கழித்த போது எனக்கு பல நல்ல நண்பர்களின் நட்பு கிடைத்தது.என் தந்தை மீது பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார்.இந்திய நாடு விவசாயம் சார்ந்த நாடாகும், இங்கு வேளாண் துறை முக்கியமாக உள்ளது.ஆனால் ஆண்டுக்கு 5சதவிகிதம் மேல் வளர்ச்சி காண முடியாது,வேளாண் நிலப்பரப்பை கூட்ட முடியாது.குறைந்து தான் வரும், எவ்வளவு விஞ்ஞானத்தை புகுத்தினாலும் 4 அல்லது 5 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி இருக்காது.ஆனால் 15சதவிகிதம் வளர்ச்சியை தொழில்துறையில் காண முடிகிறது..இதனால் தொழில் துறையில் உலகில் வளர்ச்சி அடைகிறது.தொழில் வளாச்சி தான் ஒரு நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை நன்கு அறிந்தவர் பி.ஏ.ராமசாமி, அவர் மறைவிற்கு பின் அவரது புதல்வராகிய பி.ஆர்.ஆர். 26வது வயதில் நிர்வாக பொறுப்பை ஏற்றார்.அப்போது ஆண்டுக்கு ராம்கோ குழுமத்தின் வருவாய் 80கோடி, படிப்படியாக தொழில் துறையில் தனது உழைப்பை பயன்படுத்தி அயராது உழைத்து தற்போது ஆண்டுக்கு 5ஆயிரம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது.இங்கு வருவாய் என நான் குறிப்பிடுவது பணத்தை மட்டுமல்ல, ஏனெனில் இந்த வருவாய் அவரது குடும்பத்தை மட்டுமே சேர்வது என்ற அர்த்தம் அல்ல, இக்குழுமத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம்,கல்வி, ஆன்மீகம் என பல சேரும், அந்த அளவிற்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அயராது உழைத்தவர் அவர், மேலும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,கரு.முத்துதியாகராஜன், பிர்லா, பி.ஏ.சி.ராமசாமிராஜா ஆகியோர் பஞ்சாலை தொழிற் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள். செட்டிநாடு நகரத்தார் பும்புகாரில் இருந்து 96ஊர்களில் குடிபெயர்ந்து குடியேறினார்கள், ஆனால் ராஜா வகையினர் ஆந்திராவில் இருந்து ராஜபாளையத்திற்குள் மட்டும் குடியேறி தொழிற்புரட்சி ஏற்படுத்தி உலக வரைபடத்தில் இந்த ஊரின் பெயரை நிலைநாட்டினார் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா,அவரது உருவப்படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் தற்போது ராம்கோ குரூப்பிற்கு சேர்மனாக பொறுப்பேற்றுள்ள அவரது புதல்வர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா அவரது தந்தை 26வயதில் பொறுப்பேற்று பஞ்சாலை தொழிற்துறையில் சாதித்து காட்டியது போன்று, இவரும் இத்துறை மட்டுமல்லாது இக்குழுமத்தை சார்ந்துள்ள அனைத்து துறைகளிழலும் சாதனை படைத்து, தந்தையை போன்று எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்.இவ்வாறு பேசினார்.விழாவில் ஐ.என்.டி.யூ.சி மாநில தலைவர் தேவராஜன், செயல்தலைவர் கதிர்வேல், மற்றும் ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து