முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி தமிழ்நாடு வேளாண்மை தரவரிசை பட்டியலில் மாநில அளவில் முதலிடம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், 16-புதூரைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (47) விவசாயி. நாச்சிமுத்து - ராஜலெட்சுமி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் மூத்த மகள் எஸ்.என்.ஆர்த்தி, எஸ்.என்.நவீன். இதில் எஸ்.என்.ஆர்த்தி கடந்தாண்டு திருச்சங்கோடு எஸ்.கே.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து 1189 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இவர் தனியார் கோச்சிங் செண்டரில் மருத்துவ பாடத்திற்கு கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.  12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் எஸ்.என்.ஆர்த்தி 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார். இது குறித்து மாணவி ஆர்த்தி கூறியதாவது, நான் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக நேரம் சி.பி.எஸ்.இ. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு புத்தகங்களை மட்டும் படிப்பதோடு, வீட்டு வேலைகளையும் செய்தும் படித்து வந்தேன். கிராமப்புற மாணவியான நான் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியிலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.  இதேபோல் அனைத்து கிராமப்புற மாணவிகளும் படித்து, அனைத்து துறைகளில் முதலிடம் பிடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து