பதஞ்சலிக்கு நிலம் ஒதுக்க ராஜஸ்தான் அரசு மறுப்பு

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      வர்த்தகம்
patanjali 2018 01 17

ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படும் என கூறப்பட்ட இந்த பூங்காவுக்கு முதல்வர் வசுந்த்ரா ராஜே அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், ஆலை அமைய உள்ள இடம் ஒரு ஆலையத்தின் டிரஸ்டுக்கு சொந்தமானது என்றும், இந்த நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விட முடியும் என பின்னர் தெரிய வந்தது. இதனால், உணவுப்பூங்கா அமைப்பதில் முட்டுக்கட்டை விழுந்தது. மாநில அரசும் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது. தற்போது, மாற்று இடம் தேடப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் புதிய உணவுப்பூங்கா அமைக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து