முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்கை முடிவின்படியே ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவு எடுக்கப்பட்டது ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை: கொள்கை முடிவுப்படியே ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து வைகோ தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால், வைகோவின் மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது.

ஐகோர்ட்டில் விளக்கம்
இந்நிலையில் கொள்கை முடிவுப்படியே ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக வைகோ தொடர்ந்த வழக்கானது ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், உயர் மட்ட அளவில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்தது என்று தெரிவித்தார். தமிழக அரசு தெரிவித்த தகவலை ஏற்றுக் கொண்டு, வைகோ தொடர்ந்த வழக்கினை முடித்து வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

அமில கழிவு அகற்றம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக அம்மாவட்ட மக்கள் கிட்டத்தட்ட 100 நாட்கள் போராடினார்கள். 100-வது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அவர்களது குடும்பத்தாருக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி ஆறுதலும் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது அங்கு கந்தக அமில கழிவும் லாரிகள் மூலம்  அகற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து