வீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆனி வருஷாபிஷேகம்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      ஆன்மிகம்
TIRUCHENDUR KOVIL VARUSABISEGAM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆனி வருஷாபிஷேகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஓன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்கப்பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்திற்கும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு காலை 8.40 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமானத்திற்கு புனித நீரால் வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமானத்திற்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தாகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து