முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநில பட்ஜெட் வரும் 5-ம் தேதி தாக்கல்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் வரும் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான முடிவு பெங்களூரில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது.

அதன்படி, முதல்வரும், நிதியமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமி நிகழ் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை அன்றைய தினம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்ததால், மாநிலத்தில் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கு பேரவைத் தேர்தல் நடைபெற்று மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி புதிதாக ஆட்சியமைத்துள்ள நிலையில், தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பேரவைக் கூட்டத்தை வரும் 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. முதல் நாள் நடைபெறவுள்ள சட்டப் பேரவை - மேலவை கூட்டுக் கூட்டத்தில் மாநில கவர்னர் வஜுபாய் வாலா உரையாற்றி பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து