முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட இந்தியாவில் விரைவில் பருவமழை தொடங்கும் வரும் 27க்கு பிறகு இடியுடன் கூடிய மழை இந்திய வானிலை மையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: வடஇந்தியாவில் பருவமழை விரைவில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்நிலையில் வட இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை பெய்யும் சூழல் பிரகாசமாக ஏற்பட்டுள்ளது.

மகராஷ்டிரா, சத்தீஷ்கர், ஓடிசா ஆகிய மாநிலங்களில் அதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் மழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா, சத்தீஷ்கர், ஒடிசா, மேற்குவங்கம், தெற்கு குஜராத், ஜார்கண்ட், பீகார், மற்றும் மத்திய பிரதேசத்தில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவ மழைக்கு முன்னதாக வரும் 27-ம் தேதி முதல் இடியுடன் கூடிய பருவமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட், மத்திய பிரேதேசம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அசாம், மேகலாயா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. நாட்டின் மழை சதவீகிதம் இயல்பை விட 39 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பருவமழை இந்தியாவின் மத்திய பகுதிக்கு நகர்ந்துள்ள நிலையில் மழையின் பற்றாக்குறை அளவு 70 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து