முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் புதிய தலைமைசெயலராக சுப்பிரமணியம் பதவியேற்பு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பி.வி.ஆர்.சுப்ரமணியம், நேற்று பதவியேற்று கொண்டார்.

ஜம்மு-காஷ்மீரில் பி.டி.பி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க திரும்பப் பெற்றது. இதனால் மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம், நேற்று பதவியேற்றுக்கொண்டார். கடந்த 1987-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இவர், கடந்த 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் தனிச் செயலராக செயல்பட்டுள்ளார்.

இதுவரை ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலராக செயல்பட்டு வந்த பி.பி.வியாஸ், அம்மாநில கவர்னர் வோராவின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி விஜய் குமார் கூட கவர்னரின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து