முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை கேலி செய்வதற்கு ரூம் போட்டு யோசிக்கின்றனர் மீம்ஸ் போட்டவர்களுக்கு ஜெயகுமார் வாழ்த்து

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: என்னைப் பற்றிய மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்கிறேன் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்தே அதிகளவில் மீம்ஸ்கள் போடுகின்றனர். என் மண்டையில் கிரிக்கெட் விளையாடுவது போல் மீம்ஸ் போடுகின்றனர். பிரதமர் மோடி என் தலையில் அமர்ந்து யோகா செய்வது போல் மீம்ஸ் உருவாக்குகின்றனர். இவற்றையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு சிந்தித்து நேரம் செலவழித்து மீம்ஸ் உருவாக்குபவர்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதன் பின், பாடல் ஒன்றில் தன் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸை ஜெயக்குமார் விளக்கினார். அப்போது பேசிய அவர், அந்த மீம்ஸ் எனக்குப் புரியாததால் நானே என் நண்பர்களுக்கு அனுப்பி விளக்கம் கேட்டு பெற்றுக் கொண்டேன். சிலவற்றை வெளியில் சொல்வதற்கு சங்கடமாக உள்ளது. எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கின்றனர் என்று நகைச்சுவையுடன் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து