முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் புதிய நீர்ப்பாசன திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

போபால்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில் மோகன்பூரா நீர்ப்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 3,866 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அணை, மற்றும் கால்வாய் ஆகியவை, மாநிலத்தின் 727 கிராமங்களுக்கு பயனளிக்கும்.

இந்த புதிய திட்டத்தின் துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த முனைப்பு காட்டு முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பாராட்டுகிறேன். அதேசமயம் ஏழைகளின் நலனக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. பா.ஜ.க அரசை மக்கள் நம்புகிறார்கள். பொய்கள், குழப்பம், அவநம்பிக்கை ஆகியவை விலகியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியிலும் 13 ஆண்டுகளாக மாநிலத்திலும் ஏழை, விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பகுதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பா.ஜ.க பாடுபடுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து