முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா காஷ்மீர் பயணம்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்திய பிறகு முதல் முறையாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பி.டி.பி. கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றது. இதனால் மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றார். இதையடுத்து அங்கு பா.ஜ.க.-வின் இருசக்கர வாகன பேரணியில் அவர் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து கட்சியின் முக்கியப் பிரமுகர்களை சந்தித்த அவர் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து