நிரவ் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      வர்த்தகம்
Nirav Modi 16 02 2018

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று செலுத்தாமல் மோசடி செய்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக நிரவ்மோடி, அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ. அளித்துள்ள ஆவணங்களை இன்டர்போல் ஆய்வு செய்தது. இந்த ஆவணங்கள் குறித்து திருப்தி தெரிவித்தது. நிரவ்மோடிக்கு எதிரான ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதால் இன்டர்போல் அடுத்த வாரம் தொடக்கத்திலேயோ ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து