முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமண தம்பதிகளுக்கான குடும்ப நல ஆலோசனை கருத்தரங்கு ராமநாதபுரம் கலெக்;டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் புதுமண தம்பதிகளுக்கான குடும்பல நல ஆலோசணை கருத்தரங்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக நடைபெற்ற புதுமண தம்பதியர்களுக்கான ஆலோசனை கருத்தரங்கினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்து, புதுமண தம்பதிபர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- தற்போதைய காலகட்டத்தில், திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக மிக குறைந்த வயதிலேயே விவாகரத்து போன்ற முடிவுகளுக்கு வரும் சுழ்நிலை இருந்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளை முழுமையாக தவிர்த்திடும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக புதுமண தம்பதியர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. கனவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு, தனிநபர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் விவாகரத்து போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளை தவிர்த்திடலாம்.
 அதேபோல, பெண்கள் கருவுறும் காலத்தில் தங்களது மனத்தின் ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பினித் தார்மார்களின் மனநிலையானது அவர்களது குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இக்கருத்தரங்கில், குடும்ப நல ஆலோசனை, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், குழந்தைகள் நலம் பேணுதல் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. இக்கருத்தரங்கினை புதுமன தம்பதியினர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பெ.கிருஷ்ணவேணி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பி.குமரகுருபரன், ராமநாதபுரம் மரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் மரு.பெரியார் லெனின், டாக்டர்.டி.ஸர்மிளா உட்பட அரசு அலுவலர்கள், புதுமண தம்பதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து