முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படப்பிடிப்பில் காயம் - நடிகர் தனுஷ் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : பாலாஜி மோகன் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சண்டைக் காட்சியில் நடிகர் தனுஷ் காயமடைந்த நிலையில், தனது உடல்நலம் குறித்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக் காட்சி ஒன்றில் நடிகர் தனுஷுக்கு காலில் காயம் ஏற்பட்டது.படப்பிடிப்பு தளத்திலேயே அவருக்கு முதலுதவி அளித்த படக்குழு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தனுஷ் காயம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், தான் நலமுடன் இருப்பதாக நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் கூறியிருப்பதாவது, `பெரிய காயம் எதுவும் இல்லை, நான் நலமுடன் இருக்கிறேன். ரசிகர்களின் அன்பு, வேண்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து