முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் ஆலய வழிபாட்டு கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி.

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்- ராமேசுவரம் பகுதியில் கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை சார்பாக நடைபெற்ற ஆலய  வழிபாட்டு பயிற்ச்சி முகாமில் கலந்துகொண்ட பூஜாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழச்சி நேற்று நடைபெற்றது.
  ராமேசுவரம் பகுதியில் கோசுவாமி மடத்தில் கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை சார்பாக கிராமக்கோவில் பூஜாரிகளுக்கான  ஆலய  வழிபாட்டு பயிற்ச்சி முகாம்  கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி முடிவடைகிறைது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த முகாமில் தமிழக முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து 135 கிராம பூஜாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.இவர்களுக்கு முகாமில் தமிழ் மற்றும் சமஸ்கிரதம் ஆகிய மொழிகளில் 21 தியானங்கள் மற்றும் யோகா பயிற்ச்சி, விநாயகர் முதல் முருகன்,மாரியம்மாள்,காளியம்மாள் உள்பட ஏராளமான கோவில்களில் அர்ச்சனை பூஜை  வாசிப்பது குறித்து பயிற்ச்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமின்  பதிநான்காவது நாளான நேற்று பயிற்ச்சி முகாமில் கலந்துகொண்ட பூஜாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு  தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்தார்.பூஜாரி ஜீவநாதன் இறைவணக்கம் அளித்தார்.  கிராமகோவில் பூஜாரிகள் பேரவையின் மாநில இனை அமைப்பாளர் மனோஜ்குமார் வரவேற்புரையாற்றினார். கி்ராமக்கோவில் பூஜாரிகள் பேரவை நிறுவாக அறங்காவலர் வேதாந்தம்ஜி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதி்காரி செல்லமுத்து, ராமேசுவரம் இராமகிருஷ்ண மடம் நிர்வாகி நியமனந்தா மஹராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்து சிரைப்புறையாற்றினார்கள். நிகழ்ச்சியில் தொடர்ந்து பயிற்ச்சிபெற்ற 131 கிராமகோவில் பூஜாரிகளுக்கு அமைச்சர் மணிகண்டன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கே.கே.அர்ச்சுனன்,ராமேசுவரம் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் குணசேகரன்,அம்மா பேரவை நகர் செயளாலர் கஜேந்திரன்,கோசுவாமிமடம் நிர்வாகி ராமசுப்பு,சமூக ஆர்வாளர் ஆரியாஸ் வெங்கடேஷ்வரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்
  மத்திய அரசியிடம் புன்னிய பூமியின் பெயரை சுட்டிகாட்டி பல்வேறு திட்டங்களை பெற்றுள்ளேன்: நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமிதம்:
 ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக பிரசித்தம் பெற்ற 12 ஜோதிலிங்க ஸ்தலத்தில் தென் மாநிலத்தில் சிவஸ்தலம் அமைந்துள்ள புன்னிய பூமி ராமேசுவரம் பகுதியாகும்.இந்த பகுதியில் ராமநாதசுவாமி அமைந்திருப்பது உலக முழுவதும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியை தெரியவருகிறது.இதை பயன் படுத்தி மத்திய அரசியிடம் கலைக்கல்லூரி,விமான நிலையம்,வைகை நீர் போன்ற மத்திய அரசு திட்டங்களை எவ்வொரு முறையும் துறைசார்ந்த  மத்திய அமைச்சர்களிடம் முன் வைத்து திட்டங்களை பெற்றுள்ளேன்.வெளிமாநில அமைச்சர்களை கவரும் வகையில் ராமநாதசுவாமி அமைந்த ராமேசுவரம் பகுதி மனதில் இடம் பிடித்துள்ளது எனவும்,ராமநாதபுரத்தில் எந்த திட்டத்தையும் ராமேசுவரம் பெயரை  முன் வைத்து வாங்கி விடலாம் எனவும்  பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து