முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தகப் போரால் நெருக்கடி: அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இரு சக்கர வாகன நிறுவனம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்கா தொடங்கிய வர்த்தகப் போரில் சிக்கி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்ட்லி டேவிட்சன், சொந்த நாட்டில் இருந்து வெளியேறப்போவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்ட்லி டேவிட்சன் தனது தொழிற்சாலைகளை அமெரிக்காவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த வர்த்தகப் போரால் அதிகம் பாதிக்கப்படுவது தற்போது அமெரிக்க தொழில் நிறுவனங்களே.

வெளிநாடுகளில் இருந்து இரும்பு, அலுமனியம் போன்றவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்க அரசுக்கு கூடுதலாக வரி செலுத்துகின்றன. அதே சமயம் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது, அந்நாடுகளில் விதிக்கப்படும் கூடுதல் வரியையும் ஏற்க வேண்டிய கட்டாயம் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இருமுனை தாக்குதலுக்கு அந்நிறுவனங்கள் ஆளாகி வருகின்றன.

கூடுதல் வரியால் ஒரு இருசக்கர வாகனத்திற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இந்த இருமுனை வரியால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஹார்ட்லி டேவிட்சன் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து வெளியேறி, ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்துள்ளது. ஹார்ட்லி டேவிட்சன் நிறுவன வாகனங்கள், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக விற்பனையாகின்றன.

இந்தியா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும் அந்நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. இதனிடையே ஹார்ட்லி டேவிட்சன் நிறுவனத்தின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து