முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நுழைய அகதிகளுக்கு தடை: அதிபர் டிரம்ப் விதித்த தடைக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதன்கிழமை, 27 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களுக்கு டிரம்ப் அரசு விதித்த தடை செல்லும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பல்வேறு தரப்பு எதிர்ப்பு
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபரான பின்னர் அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினார். ஆட்சிக்கு வந்ததுமே அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை முன்னெடுத்தார். இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டார். ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டது. டொனால்டு டிரம்ப் அரசின் இம்முடிவிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விவகாரம் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு சென்றது.

ஆதரவாக தீர்ப்பு...
இப்போது இவ்வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளனர். இஸ்லாமியர்கள் மீது பேதம் காட்டும் செயல் என்ற எதிர்ப்புகளை கோர்ட்டு நிராகரித்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு மீது அரசு காட்டிய அக்கறை நியாயமானது. அரசின் கொள்கையில் எந்தவிதமான எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை என்று கோர்ட்டு கூறியது. இதனையடுத்து 8 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே டொனால்டு டிரம்ப், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து