முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீச்சல் உடையில் நடித்தது ஏன்? ரெஜினா

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      சினிமா
Image Unavailable

பாஃப்டா மீடியா சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி. இதில் கவுதம் கார்த்திக், ரெஜினா கசண்ட்ரா, வரலட்சுமி, கார்த்திக், சதீஷ், மைம்கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய ஷாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கதை திரைக்கதை எழுதி திரு இயக்கி உள்ளார். இப்படம் வரும் ஜூலை 6-ம் தேதி வெளியாகிறது. சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் திரு கூறுகையில், இந்த படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முதல் பாதி விறு விறுப்பாகவும், இன்டர்வல் பிளாக்கில் ஒரு டுஸ்டுன் படம் சூடுபிடிக்கும். கவுதம், ரெஜினா கெமஸ்ட்ரி சிறப்பாக வந்துள்ளது. வரலட்சுமியின் கேரக்டர் சஸ்பெண்ஸ். தயாரிப்பாளர் தனஞ்செயன் சுதந்திரமாக எடுக்க அனுமதித்தார்.

நடிகை ரெஜினா பேசுகையில்:-

இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். கவுதமுடன் நடித்தது மறக்கமுடியாதது. வரலட்சுமியுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அவர் மிகவும் போல்டானவர். இதில் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் எங்களை மேலும் அழகாக காட்டி உள்ளார். ஆடை குறைப்பு பற்றி கவலையில்லை. பாடலுக்கு தேவை என்பதால் நீச்சல் உடை அணிந்தேன் என்றார்.’

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து