முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோனி கென்னடி ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவழியை சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 9 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக பதவியேற்று விட்டால் அவர் உயிரிழக்கும் வரை பதவியில் நீடிப்பார். சில நீதிபதிகள் மட்டும் தாமாக முன்வந்து ஓய்வெடுப்பதாக அறிவிப்பது உண்டு. அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி அந்தோனி கென்னடி (81) வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியை தேர்வு செய்யும் பணியை அதிபர் டிரம்ப் தொடங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக வேண்டும் என்றால் அவரை அதிபர் பரிந்துரைக்க வேண்டும். அந்த பரிந்துரையை நாடாளுமன்றத்தின் செனட் அவை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காக 25 நீதிபதிகள் அடங்கிய பட்டியலை அதிபர் டிரம்ப் தயார் செய்துள்ளார். இதில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து