முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபரின் அறிஞர்கள் பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அதிபரின் அறிஞர்கள் பட்டத்திற்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் அதிகஅளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ள இந்திய வம்சாவளி மாணவர்களை அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு அழைத்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்க அளவில் மிகச்சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிபரின் திறனாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்களை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அமெரிக்க அதிபர்கள் பாராட்டி கவுரவிப்தும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அதிபரின் அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 161 மாணவர்கள் அமெரிக்கா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இதுவரை இல்லாத அளவு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்த அதிபர் டிரம்ப், அவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார். பின்னர் அவர்களுக்கு மெடல் வழங்கி பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து டிரம்ப் கூறுகையில், உங்களின் திறமைகளை நினைத்து நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்க தேசமுமே மகிழ்ச்சி கொள்கிறது. உங்களுக்கு எனது வாழ்த்துகள், மிகச்சிறந்த எதிர்காலம் அமையட்டும் எனக் கூறினார்.

அதிபரால் பாராட்டப்பட்ட இந்திய மாணவர்களில் மிஹிர் படேலும் ஒருவர். சமூகவலைதளங்கள் மூலம் தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் தவறான பிரச்சாரங்கள் செய்யும் போது அவர்களது உருவத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை மிஹிர் படேல் கண்டறிந்துள்ளார்.

புளோரிடாவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப பொறியியல் துறை மாணவியான காவ்யா, நீரழிவு ரெட்டினோவை மொபைல் போன் வழியாக 3டி முறையில் தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து