முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளியை சேர்ந்த சீமா நந்தாவுக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியில் முக்கிய பொறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு தலைமைச் செயலராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியை அதிகாரப்பூர்வமாக நிர்வகிக்கும் அந்த அமைப்பின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய - அமெரிக்கர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சீமா நந்தா கூறுகையில், எனது வாழ்நாளிலேயே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இந்த நியமனம்தான். இதற்காக ஜனநாயகக் கட்சிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து