முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

நெதர்லாந்து : சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது. பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை 1-1 என டிரா செய்தது.

2019-ம் ஆண்டில் உலக ஹாக்கி லீக் போட்டிகள் தொடங்கப்படும் நிலையில் நெதர்லாந்தின் பிரெடா நகரில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி கடைசி போட்டி நடந்து வருகிறது. உலகின் தலைசிறந்த 6 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் ஏற்கெனவே உலக சாம்பியன் ஆஸ்திரேலியா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அணியை நிர்ணயிக்கும் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணியை 1-1 என டிரா செய்து இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்திய தரப்பில் மந்தீப் சிங்கும், நெதர்லாந்து தரப்பில் தியரி பிரிங்க்மேனும் கோலடித்தனர். நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸி.யுடன் மோதியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து