முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்அவுட் சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி வரலாறு படைக்குமா ரஷ்யா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : மாஸ்கோவில் நடைபெறவுள்ள நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை வென்று ரஷ்யா புதிய வரலாறு படைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியை ரூ.87 ஆயிரம் கோடி செலவில் ரஷியா சிறப்பாக நடத்தி வருகிறது. முதல் கட்ட தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு 16 அணிகள் முன்னேறி உள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் கடந்த சனிக்கிழமை தொடங்கின. இந்நிலையில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின்-ரஷிய அணிகள் மோதும் ஆட்டம் நேற்று இரவு மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் நடைபெறுகிறது.

ரஷிய அணி தகுதிச் சுற்று ஆட்டங்களில் சவூதி அரேபியா, எகிப்தை அபாரமாக வீழ்த்தியது கால்பந்து வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் உருகுவேயிடம் 3-0 என பலத்த தோல்வியைச் சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ரஷிய அணி தனது முழு பலத்தை காட்டி போராடும். ரஷிய பயிற்சியாளர் ஸ்டானிஸ்லோ கூறுகையில்,

ஸ்பெயினுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் எனத் தெரியும். வித்தியாசமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என்றார். அதே நேரத்தில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோவுடன் டிரா, ஈரானுடன் தட்டுத்தடுமாறி வெற்றி என கடுமையான சிக்கலுக்கு பின் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இஸ்கோ, இனியஸ்டா, இயாகோ அஸ்பாஸ், தியாகோ, ரமோஸ், ஜெரார்ட் பிக், டேவிட் ஜியே என சிறந்த வீரர்கள் இருந்தாலும் அந்த அணி தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தவில்லை.

கடந்த யூரோ 2016 போட்டிக்கு பின் ஸ்பெயின் அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மேலும் உலகக் கோப்பை போட்டியின் இடையிலேயே பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்கையை சம்மேளனம் நீக்கியது. சிறந்த நடுக்கள வீரர்களுடன் ஸ்பெயின் வலிமையாக உள்ளது. தகுதி ஆட்டங்களிலேயே 5 கோல்களை விட்டுக் கொடுக்க நேரிட்டது.

ரஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் கட்டுக்கோப்பாக விளையாட வேண்டும். 11 வீரர்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ரஷிய ரசிகர்களையும் சேர்த்து எதிர்கொள்ள வேண்டும். தகுதி சுற்றில் எதிரணிகளுக்கு கோலடிக்க வாய்ப்புகளை உருவாக்கி விட்டோம். இதில் அவ்வாறு அலட்சம் காட்டக்கூடாது என பயிற்சியாளர் பெர்ணாண்டோ ஹியரோ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து